அக்குறணை Ride for life + CSM இன் உதவி நடவடிக்கை

Ride for Life MCC (அக்குறணை மோட்டார் சைக்கிள் கிளப்) மற்றும் CSM (விஷேட தேவை உடையவர்களுக்கான பாடசாலை) பள்ளியுடன் கைகோர்த்தது, 1060 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு உலர் உணவு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றது. எந்தவொரு நம்பிக்கை அல்லது மதத்தை நோக்காக கொள்ளாமல், தினக் கூலியை சார்ந்து இருக்கும் நபர்களுக்கும் மற்றும் வறுமையின் கீழ் உள்ளவர்களுக்கும் இந்த பொருட்கள் சென்றடைய ஆவன செய்யப்பட்டுள்ளது.

சுமார் ரூபா 2,000,000 இனை மிக குறுகிய அறிவிப்பில் சேர்ப்பதற்கு சாத்தியமாக்கிய அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவர்கள் நன்றி தெரிவித்து கொள்கின்றனர்.

முறையாகவும் சட்டரீதியாகவும் இதனை முன்னெடுப்பதற்கு உதவிய அக்குறணை பிரதேச சபைக்கும் இவர்கள் தமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

கட்டம் 1 – 2020 மார்ச் 23 திங்கள் – அன்று கொள்வனவு செய்யப்பட 19000 கிலோ பொருட்களை களஞ்சியத்தில் இறக்கப்பட்டது.

கட்டம் 2 – தொடக்கம் – 2020 மார்ச் 24 செவ்வாய்க்கிழமை – பொருட்களை பொதி செய்யும் நடவடிக்கை.
 
மற்றும் 3 ஆம் கட்டம் – அக்குறணையில் 30 மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்தல்.

ஒரு பொதிக்கு உட்படும் பொருட்கள்:

அரிசி, பருப்பு, நெத்தொலி, சோயா மீட், மிளகாய் தூள், வெங்காயம், உருளைக்கிழங்கு, வட்டக்காய்

முக்கியமான நேரத்தில் சிரமங்கள் பாராது உழைக்கும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு அல்லாஹ் மேலும் மேலும் வாழ்வில் பரகத்தினை ஏற்படுத்துவானாக என்று Akurana Today கூறிக்கொள்கின்றது.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter