புதிய அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் என சகோதர இனத்தவர்களும் பங்கு கொள்வார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் (09) காலை 8.30 மணியளவில் களனி ரஜமஹா விஹாரையில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து கண்டியில் அமைச்சரவைக்கான அமைச்சுப் பொறுப்புக்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளன என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் என சகோதர இனத்தவர்களும் பங்கு கொள்வார்கள்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் அரசாங்கம் செயற்படாது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter