CCTV வீடியோ – ஊரடங்கு நேர கைதுகள்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த 3 பேர் கைதாகியுள்ளனர்.

இவர்கள், இன்று காலை 8.10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பொலிஸார் வீதிப் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஊரடங்கு வேளையில் வீதிகளில் பயணித்த 3 பேரை பொலிஸார் துரத்திப் பிடித்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு என பார்ப்பதற்காக வீதிக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=fQcM5F_RCP0

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter